• Jan 19 2025

உங்களை நம்பித்தான் கமலுடன் போட்டியிடுகிறேன் ! பார்த்திபன் வெளியிட்ட அறிக்கை !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழில் ஒரேமாதிரியான திரைப்படங்கள் வெளியாகினாலும் ஒரு சிலர் மாத்திரமே வித்தியாசமாக திரைப்படங்களை எடுக்கின்றனர். அவ்வாறான பார்த்திபன் சமீபத்தில் சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்னும் திரைப்படத்தை எடுத்துள்ளார்.


தேசிய விருது வென்ற இயக்குனரும் , நடிகருமான  பார்த்திபன் இயக்கிய திரைப்படம் டீன்ஸ் ஆகும் , ஒரு த்ரில்லிங் அட்வென்ச்சர் படமாக இருக்கும் இது  பதின்மூன்று இளைஞர்களைக் கொண்ட உற்சாகமான குழுவை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான திரைப்படமாகும். 


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்துடன் சேர்ந்து வெளியாகின்றது. இதுகுறித்து பார்த்திபன் தனது X தள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.


அவர் கூறுகையில் " நண்பர்களே! இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால்,எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் TEENZ 12/07/2024 அன்று முதல்…முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள்,சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள்-சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன்!நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை reservation தொடங்கிய உடனேயேக் காட்டுங்கள்.நானே கமல் சாரின் தீவிர ரசிகன் தான்.INDIAN 2 வை இருமுறை பார்த்து விட்டாவது நம் TEENZஐ கண்டு கொள்ளுங்கள்.TEENZ அனைவரும் INDIAN-ஐ பார்த்து பாராட்டி மகிழ வேண்டும்.அதே போல INDIANs அனைவரும் TEENZ ஐ உளப்பூர்வமான இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் share செய்யுங்கள் please!" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement