‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் ரத்ன குமார், தற்போது ‘29’ என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் Stone Bench Films மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் G Squad இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளதுடன், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவினாஷ் பிரேம்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு இசையை ஷான் ரோல்டன் அமைத்துள்ளார். அவரின் இசை, படத்தின் உணர்ச்சிகளை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ள இந்த ‘29’ திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் காதல், உணர்ச்சி, வாழ்க்கை போராட்டம் ஆகியவை கலந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த படம் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Listen News!