• May 07 2026

நள்ளிரவில் பால் டப்பா கூட என்ன பண்ணுறீங்க திரிஷா.? வைரலான வீடியோவால் தலைகீழான பேச்சுகள்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷாவை சுற்றி கடந்த சில நாட்களாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக சூர்யாவுடன் நடித்துள்ள ‘கருப்பு’ படத்திற்கு பிறகு அவர் புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை என்றும், சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷாவை படக்குழு அழைக்கவில்லை என அவர் தரப்பிலிருந்தே கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதற்கிடையில், விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து சமூக வலைத்தளங்களில் பல பேச்சுகள் பரவின. பிறந்தநாளன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த த்ரிஷா, பின்னர் விஜயின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் இருவரையும் சுற்றிய வதந்திகள் மேலும் அதிகரித்தன.

அதே நேரத்தில், “த்ரிஷா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார்” என்ற பேச்சும் ரசிகர்களிடையே பரவத் தொடங்கியது. ஆனால் தற்போது அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், த்ரிஷா புதிய இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.

இசைக்கலைஞர் பால் டப்பாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள புதிய மியூசிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஊஞ்சலில் அமர்ந்து இருவரும் இணைந்து நடனமாடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.

‘Psilovibin’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ பாடலில் த்ரிஷா மிகவும்  ஸ்டைலிஷ் தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த வீடியோவை பால் டப்பா குழு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதையடுத்து, அது வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் திடீரென இசை ஆல்பத்தில் தோன்றிய த்ரிஷாவின் புதிய அவதாரம் ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. “சினிமாவை விட்டு விலகுகிறார்” என்ற பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், புதிய ஸ்டைலில் அவர் கொடுத்த இந்த என்ட்ரி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement