• Jul 14 2026

பார்லர் போகவே தேவையில்லை.. இயற்கையான முறையில் ஜொலிக்க பூமிகா சொன்ன டிப்ஸ்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் பூமிகா சாவ்லா. 2000ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அவர், மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.


இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது இளமையான தோற்றத்தையும் சரும அழகையும் எப்படி பராமரிக்கிறார் என்பது குறித்து பூமிகா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். “நான் எதை சாப்பிட்டாலும் அளவோடு மட்டுமே சாப்பிடுவேன். அதிகமாக தண்ணீர் குடிப்பதும், தினமும் பழங்களை சாப்பிடுவதும் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை தருகிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சரியான நேரத்தில் தூங்குவது மிகவும் முக்கியம். யோகா செய்வது மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது. அதோடு, நீச்சல் மற்றும் நடைப்பயிற்சியை நான் ஒருபோதும் தவறவிட மாட்டேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

பூமிகாவின் இந்த எளிய வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, இயற்கையான முறையில் அழகை பராமரிக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement