• Jul 13 2026

ஆர்.பி. சௌத்ரிக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்த முக்கிய பிரபலங்கள்.. கதறி அழுத நடிகர் ஜீவா!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கிய R. B.செளத்ரி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 72 வயதான அவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் உயிரிழந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பல மொழிகளில் ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்த அவர், குறிப்பாக தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கிய முக்கியமான நபராகக் கருதப்பட்டார். அவரது பங்களிப்பு தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் மிகப்பெரியது.

தற்போது, அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்கள், தொழில்துறை நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.


குறிப்பாக, நடிகர்கள் சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது திடீர் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரின் நினைவுகள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்.


Advertisement

Advertisement