தமிழ் சினிமாவில் புதிய முகமாக அறிமுகமாகி மிகக் குறுகிய காலத்திலேயே கவனம் ஈர்த்துள்ளவர் கென். அவர் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படம் இந்த ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ்ப்படமாக மாறி, ரூ.85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஓடிடியில் வெளியான பிறகும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தன் முதல் படத்திலேயே வித்தியாசமான கதைத் தேர்வு மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய கென், தற்போது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். விமர்சகர்களும், ரசிகர்களும் அவரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது அடுத்த கட்டம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவர் மீண்டும் தானே இயக்கி நடிக்கப் போகிறாரா அல்லது மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், தமிழ் சினிமாவின் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கென்னை வைத்து சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் புதிய திரைப்படம் தயாரிக்க தயாராக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இளம் தலைமுறைக்கு ஏற்ற கதைகளில் கென் போன்ற புதிய நடிகர்கள் முக்கிய இடத்தைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. சில முன்னணி நடிகர்களும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
Listen News!