• Jul 14 2026

இப்போ இது தேவையா? விஜய்யின் அரசியல் சர்ச்சைகளுக்கு நடுவே வைரலான த்ரிஷாவின் ஸ்டோரி.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் சர்ச்சைகளில் ஒன்று விஜய் மற்றும் திரிஷா குறித்து வெளியாகும் கிசுகிசுக்களே. இருவரும் பல படங்களில் இணைந்து நடித்ததிலிருந்து, அவர்களை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. 


சிலர் இவர்களுக்குள் நெருக்கமான உறவு இருப்பதாக கூறி வந்தாலும், அதுகுறித்து விஜய்யோ திரிஷாவோ இதுவரை எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் அரசியலில் பெரிய முன்னேற்றத்தை அடைந்து முதலமைச்சராக பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் ஆதரவு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த அரசியல் பரபரப்பின் நடுவே நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த ஸ்டோரி, மக்களின் விமர்சனங்களுக்கும் பேச்சுக்களுக்கும்  மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, “திரிஷா எப்போதும் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறார்” என்று சில ரசிகர்கள் கூற, மற்றொரு தரப்பு “இந்த நேரத்தில் இப்படியான பதிவு தேவையா?” என்று விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement