• May 08 2026

லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்.! சந்தானத்தின் புதிய பட அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சந்தானம் தற்போது புதிய படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த புதிய திரைப்படத்துக்கு ‘லவ் பைட்’ (Love Bite) என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘கான்ஜூரிங் கண்ணப்பா’ படத்தின் இயக்குநரான செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார்.


நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய சந்தானம், பின்னர் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘தில்லுக்கு துட்டு’, ‘ஏ1’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக, நகைச்சுவையுடன் கலந்த ஹாரர் கதைகளில் சந்தானத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஏஜிஎஸ் தயாரிக்கும் 29ஆவது படமாக உருவாகும் ‘லவ் பைட்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் இருண்ட பின்னணி கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இப்படமும் ஹாரர்-காமெடி ஜானரில் உருவாகி வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement