பாலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவராக திகழும் நவாசுத்தீன் சித்திக்கி, தனது ஆரம்ப கால போராட்டங்களை பற்றி மனதை உருக்கும் வகையில் பகிர்ந்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர், பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் எதிரியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஆரம்பத்தில் நமக்குள் தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது அளவற்ற காதலும் இருக்கும். ஆனால் தொடர்ந்து வரும் தோல்விகள், அந்த நம்பிக்கையை மெதுவாக உடைத்து விடும்.
ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் என்னை நீக்கிவிடுவார்கள். சில சமயம் அதைப் பற்றிக் கூட யாரும் தெரிவிக்க மாட்டார்கள். அந்த வேதனையில் தெருவோரத்தில் நின்று அழுதிருக்கிறேன்.

அதிலும், ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பார்லே-ஜி பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த நாட்கள் இருக்கின்றன. இன்றும் அந்த பிஸ்கட்டை பார்க்கும்போது பழைய டெல்லி வாழ்க்கை நினைவுக்கு வருகிறது..” என்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று தேசிய விருதுகள் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நவாசுத்தீன் சித்திக்கியின் இந்த பயணம், கனவுகளை விடாமல் பிடித்துக்கொண்டவர்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது.
Listen News!