தமிழின் பிரமாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் உருவாகி பெரு வெற்றி கண்ட "இந்தியன்" திரைப்படத்தின் தொடர்சியாய் 26 ஆண்டுகள் கழித்து வெளிவர இருக்கும் பிரமாண்ட திரைப்படமான "இந்தியன் 2" இந்த மாதம் 12 ஆம் திகதி வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் முன்னணி நடிகர் அக்ஷய் குமாரின் அடுத்த படமான "சர்ஃபிரா" படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன."சர்ஃபிரா" படமானது வரும் 12 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாவதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கராவின் இயக்கத்திலும் சூர்யாவின் நடிப்பிலும் தமிழில்வெளியான "சூரரைப் போற்று" திரைப்படத்தின் ஆஃபிஸியல் ரீமேக்கான இப் படத்தை இந்தியில் "சர்ஃபிரா" எனும் தலைப்பில் சுதா கொங்கரா இயக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
                              
                             
                            _6687ae8753805.jpg) 
                             
                                                    _6687b44c5bb5f.jpeg) 
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!