• May 15 2026

ஒரே மேடையில் ஆர்.பி. சௌத்ரி, ஜீவா, பேரன் – நினைவாக மாறிய கடைசி தருணம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் திடீர் மரணம் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்த அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஆர்.பி. சௌத்ரி, அவரது மகன் ஜீவா மற்றும் பேரன் மூவரும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றியிருந்தனர்.

அப்போது பேசிய ஜீவா, தனது தந்தையை “தமிழ் சினிமாவின் உண்மையான தயாரிப்பாளர்” என்று பெருமையாக குறிப்பிட்டார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் 99 படங்களை தயாரித்தது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். மேலும், “எங்கள் படத்தின் வெற்றி அப்பாவை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது” என்று உணர்ச்சியுடன் பேசினார்.


அதேபோல், ஜீவாவின் மகனை மேடைக்கு அழைத்த ஆர்.பி. சௌத்ரி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. “இவனுடைய தாடி என்னைவிட வேகமாக வளருது” என்று ஜீவா நகைச்சுவையாக பேசியதும் ரசிகர்களிடையே சிரிப்பலை ஏற்படுத்தியது.


தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆர்.பி. சௌத்ரியின் சிரித்த முகமும், மகன் மற்றும் பேரனுடன் இருந்த அன்பான தருணங்களும் பலரையும் கண்கலங்கச் செய்து வருகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, ஆர்.பி. சௌத்ரியின் சினிமா பங்களிப்பை பாராட்டியிருந்தனர்.

இப்போது அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், “அது அவரின் கடைசி பொது நிகழ்ச்சியாக மாறிவிட்டது” என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement