• May 08 2026

ஆளுநர் மாளிகையில் விஜய்க்கு க்ரீன் சிக்னல்... முறியடிக்கப்பட்டது முட்டுக்கட்டைகள்.!

shali / 49 minutes ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாநிலத்தின் மிகப்பெரிய தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியை அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆரம்பத்தில் இல்லாததால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.


இந்த நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வழங்கியதையடுத்து, 113 ஆதரவுடன் விஜய் கடந்த 5ஆம் தேதி ஆளுநரை சந்தித்தார். தொடர்ந்து, மே 7ஆம் தேதி பதவியேற்பு நடைபெறும் என்றும், நேரு உள்விளையாட்டு அரங்கம் நிகழ்விடம் எனவும் தகவல்கள் வெளியாகின. அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்தன. விஜய்க்கு கான்வாய் வசதிகளும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், 118 ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், பதவியேற்பு ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு அளித்ததன் மூலம் தவெக 120 உறுப்பினர்களின் பலத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து, இன்று மாலை ஆளுநரை மூன்றாவது முறையாக விஜய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அத்துடன், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு பணிகளும் மீண்டும் வேகமடைந்துள்ளன.

Advertisement

Advertisement