தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (TVK), முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை இல்லாததால், தற்போது தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழலில், விஜய்யால் தனியாக ஆட்சி அமைக்க முடியாததால், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல் நேற்று இரவு அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்ததும் இந்த விவாதத்திற்கு மேலும் தீனி போட்டுள்ளது. முக்கியமாக, இந்த தகவலை திமுக அல்லது அதிமுக தரப்பில் யாரும் வெளிப்படையாக மறுக்காததால், அரசியல் அரங்கில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பதிவின் மூலம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதன்படி அவருடைய பதிவில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… கைவிட மாட்டான்! நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்களிடையே வைரலாக பரவி வருகிறது. அதேசமயம், தமிழகத்தில் அடுத்த அரசு யாருடையது என்ற கேள்வி இன்னும் சஸ்பென்ஸாகவே நீடிக்கிறது.
Listen News!