• May 08 2026

'காந்தா' நாயகிக்கு இவ்வளவு ரசிகர்களா? கவர்ச்சியில் எல்லை தாண்டிய பாக்யஸ்ரீயின் கிளிக்ஸ்

shali / 51 minutes ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் இளம் தலைமுறை நடிகைகளில் வேகமாக கவனம் பெற்று வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸே. தனது அழகு, மாடர்ன் தோற்றம், இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.

குறுகிய காலத்திலேயே பல திரைப்பட வாய்ப்புகளை பெற்றுள்ள அவர், தற்போது தெலுங்கு திரையுலகில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.


பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் பாக்யஸ்ரீக்கு நல்ல கவனம் கிடைத்தது. அந்தப் படத்தில் அவர் நடித்த விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து பல புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸே சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ட்ரெண்டியான உடையணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, அவரது கவர்ச்சியான தோற்றம் மற்றும் நவீன ஃபேஷன் ஸ்டைல் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement