• May 06 2026

தமிழகத்தில் புதிய சகாப்தம்... ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாகக் கருதப்படும் சூழலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் ஆட்சியமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைப்பதற்கான உரிமையை அதிகாரபூர்வமாக தற்பொழுது கோரியுள்ளது.

இந்த நிலையில், விஜய் தமிழக ஆளுநர் R. N. ரவி அவர்களை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின்  போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஏற்கனவே, ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், விஜய் மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, அரசு தரப்பில் பதவியேற்பு விழா தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, Jawaharlal Nehru Stadium அரங்கில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மேலும், தேசிய மட்டத்திலும் இந்த அரசியல் மாற்றம் கவனம் ஈர்த்துள்ளது. Indian National Congress கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் விஜய்யை சந்தித்து, 5 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தையும் வழங்கியுள்ளனர்.

இந்த ஆதரவுடன், தவெக தலைமையிலான புதிய கூட்டணி உறுதியாகி, ஆட்சியமைப்பதற்கான நிலை வலுப்பெற்றுள்ளது. ஆளுநர் அழைப்பு விடுத்ததும், விஜய் அதிகாரபூர்வமாக முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என பலரும் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement