தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர். மாதவன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தனது மகன் வேதாந்த் மாதவன் வளர்ப்பு குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

அந்தப் பேட்டியில் மாதவன் கூறியதாவது, “என் மகன் வேதாந்திற்கு நான்கு வயதிலிருந்தே கருத்தடை போன்ற விஷயங்களை மிகவும் வெளிப்படையாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். குழந்தைகளிடம் சில விஷயங்களை மறைத்து வைப்பதை விட, சரியான வயதில் சரியான விளக்கத்துடன் சொல்லிக் கொடுப்பது முக்கியம்” என்றார்.
மேலும், “இந்த அணுகுமுறை காரணமாகவே என் மகனுக்கு என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் உருவானது. அவர் பொறுப்பான இளைஞராக வளர இதுவே உதவியது. சினிமா பிரபலத்தின் வாரிசாக இருப்பதால் வரும் புகழின் இருண்ட பக்கங்கள், தேவையற்ற செல்வாக்குகள், பெண்களை மதித்து நடத்த வேண்டிய அவசியம் போன்றவற்றையும் நான் தொடர்ந்து கற்றுக் கொடுத்தேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களுக்கு உலகத்தை மறைப்பது அல்ல; மாறாக வாழ்க்கையின் எதார்த்தங்களை முன்கூட்டியே புரிய வைப்பதே சிறந்த பெற்றோர்களின் கடமை” என்ற மாதவனின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!