• Jul 09 2026

விஜய் ஆட்சியை முடக்கப் பார்க்கிறதா திமுக? - குறுக்கு வழியில் போனால் அதிமுக காலி.! - பேரரசு

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையிலான கட்சி முக்கிய வெற்றியை பெற்றிருந்தாலும், இன்னும் தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 


பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெற பல்வேறு கட்சிகளுடன் தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்னும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.


இந்த நிலையில் இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவில், “திமுக ஆதரவுடன் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தால் அதுவே அதிமுகவின் கடைசி ஆட்சியாக மாறிவிடும்.” என்று எச்சரித்துள்ளார். மேலும், “சசிகலாவிற்கு செய்தது போல், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு செய்தது போல துரோகம் நடந்தால் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அதிமுக, தவெகவிற்கு நேரடியாக ஆதரவு அளிக்கவோ அல்லது குறைந்தபட்சம் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து விலகவோ வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் தான் எதிர்காலத்தில் அதிமுக மீண்டும் எழுச்சி பெறும் வாய்ப்பு இருக்கும் என்றும் பேரரசு தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


Advertisement

Advertisement