• Jul 14 2026

தவிடு பொடியான சிந்தாமணியின் திட்டம்.! மனம் மாறிய அண்ணாமலை.! முகம் சுளிக்கும் விஜயா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ஸ்ருதியின் வீட்டிற்கு விஜயா செல்கின்றார். அதேபோல், மீனாவின் வீட்டிற்கு அண்ணாமலை செல்கின்றார். வீட்டுக்கு வந்த விஜயாவுக்கு ஸ்ருதியின் அம்மா கசாயம் கொடுக்கின்றார். ஆனாலும், “இது எனக்கு குடித்து பழக்கம் இல்லை” என்று விஜயா சொல்லுகின்றார்.

ஆனாலும், “இதுதான் உடம்புக்கு நல்லது, குடியுங்கள்” என்று சுதா சொல்ல, ஒரு கணம் மீனா போட்டுத் தந்த டீயை நினைத்து வருந்துகின்றார் விஜயா. அதன் பின்பு, அதை குடிக்க முடியாமல் கீழே கொட்டி விடுகின்றார்.

மறுபக்கம் ஷோரூமுக்கு சென்ற மனோஜ், அங்கு தங்குவதற்கு எல்லாவற்றையும் ரெடி பண்ண சந்தோஷிடம் சொல்லுகின்றான். அதன்படி அவரும் புதிய பேட் வாங்கி வருகின்றார். அதோடு எலிப்பொறியும் வாங்கி வருகின்றார்.

இதை கண்ட மனோஜ், “எனக்கு எலி என்றால் பயம்” என்று சொல்லி அவரையும் தங்குமாறு வற்புறுத்துகின்றார். மேலும் அந்த நேரத்தில் ஜீவா வீட்டுப் பிரச்சினை பற்றி பேச, அதனை முத்து கவனிப்பான் என்று அசால்டாக சொல்லுகின்றார் மனோஜ்.


இன்னொரு பக்கம், அண்ணாமலையை மீனா வீட்டில் விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். சீதாவும் அவர்களுக்கு சாப்பாடு செய்து கொண்டு வந்து பரிமாறுகின்றார். இதை பார்த்த அண்ணாமலை, “தான் வீட்டை விட்டு வரும்போது மன வேதனையாக இருந்தேன். ஆனால் இப்போது அது எல்லாமே குறைந்து விட்டது.

என்னதான் இருந்தாலும் உறவுகள்தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். இப்போது மன நிம்மதியாக இருக்கிறது” என உருக்கமாக பேசுகின்றார்.

அதே நேரத்தில் மீனாவின் வீட்டை ஜப்தி பண்ணுவதற்கு அதிகாரிகள் வருகின்றார்கள். அவர்களோடு சிந்தாமணியும் அண்ணாமலையின் குடும்பம் நடுத்தெருவில் அழுது புலம்புவதை பார்க்க வருகின்றார். ஆனால் அவர்கள் ஏற்கனவே வீட்டை பூட்டிவிட்டு சென்றதை நினைத்து கோபப்படுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement