தென்னிந்திய சினிமாவில் பலரும் எதிர்பார்த்த திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. இந்த படம் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், இந்த படத்தின் சென்சார் பிரச்சினையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
இதற்கிடையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் இணையதளத்தில் முழுமையாகவே கசிந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தளபதி ரசிகர்கள் “படத்தை திரையில்தான் காண்போம்” என பொறுமையாக காத்திருக்கின்றனர்.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படம் குறித்த தாமதங்கள் மற்றும் பல்வேறு வதந்திகள் இருந்தாலும், விஜயின் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் நடிகர் விஜயின் “தளபதி” பட்டம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக “தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்” என்ற புதிய டைட்டில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த வீடியோ திரையரங்கில் ஒளிபரப்பப்படுவதுபோல் எடிட் செய்யப்பட்டிருக்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால், பலரும் இதையே ‘ஜனநாயகன்’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் என்று நம்பினர். ஆனால், படக்குழு இதுகுறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை.
இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இது ரசிகர்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கிய Fan Edit வீடியோவாகவே கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த வீடியோ அதிகாரப்பூர்வ வீடியோ அல்ல என்றாலும், இந்த கிளிப் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக “முதலமைச்சர்” டைட்டில் கார்டு திரையில் தோன்றியவுடன் ரசிகர்கள் விசில் அடித்து, நடனமாடி கொண்டாடும் திரையரங்கு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் இதை “கூஸ்பம்ப்ஸ் தரும் தருணம்” என பாராட்டியுள்ளனர்.
சில ரசிகர்கள், “இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு நடிகர் முதலமைச்சர் பட்டத்துடன் திரையில் அறிமுகமாகும் வரலாற்றுத் தருணம் இது ஆகலாம்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது விஜயின் சினிமா மற்றும் அரசியல் பயணத்துடன் ரசிகர்கள் கொண்டுள்ள உணர்ச்சி பிணைப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் விஜய் உண்மையாகவே “தமிழ்நாடு முதலமைச்சர்” என்ற டைட்டில் கார்டுடன் திரையில் தோன்றினால், அது இந்திய சினிமாவில் புதிய வரலாறாக அமையும் என்ற பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதுவே இந்த AI வீடியோவை இன்னும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாற்றியுள்ளது.
Listen News!