• Oct 23 2024

த.வெ.க மாநாட்டில் தெறிக்கவுள்ள விஜய்யின் ஸ்பீச்..! எத்தனை மணி நேரம் தெரியுமா?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் அதிக சம்பளம் வாங்கும் நிகராகவும் திகழ்ந்து வருகின்றார். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

தற்போது உள்ள நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விஜய்க்கு நல்ல மார்க்கெட் காணப்படுகின்றது. ஆனாலும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலில் கால் பதித்தார். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து விஜயின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார்கள். சினிமாவில் இருந்து விஜய் விலகுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போதும் அவர் மக்களுக்காக நல்ல சேவை செய்யப் போகின்றார் என்பதை உணர்ந்து அவரை வரவேற்க தயாராகி விட்டார்கள்.

விஜய் தற்போது தனது இறுதிப் படமான 69 வது படத்தில் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்கள்.


இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாவது மாநாடு எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாகவும், அதில் கட்சித் தலைவரான விஜய் சுமார் இரண்டு மணி நேரம் பேச உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி மாலை 4 மணிக்கு மாநாடு ஆரம்பிக்கப்படும் என்றும் சுமார் ஆறு மணிக்கு விஜய் தனது உரையை ஆரம்பிப்பார் என்றும் கூறப்படுகின்றது. மேலும் மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் உள்ள கம்பத்தில் கொடியேற்றிய பின்னர் விஜய் மேடைக்கு வருவார் என்றும் அதற்காகவே பிரத்தியேக வழி அமைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அன்றைய தினம் தனது கட்சிக் கொள்கையை பிரகடனப்படுத்தும் வகையிலேயே அவருடைய பேச்சு இருக்கும் எனவும் கட்சி ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களைக் கடந்த நிலையில், அவர் தனது கட்சி கொள்கை பற்றி வெளிப்படையாக கூறவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் மாநாட்டில் இரண்டு மணி நேர உடையில் தனது கட்சியின் முழு கொள்கைகளை பற்றியும் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.




Advertisement