• Oct 23 2024

உண்மையில் பிச்சை எடுத்தேன்! அந்த காட்சிகளை நீக்கச் சொன்னேன்! நடிகர் கவின் பேட்டி...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் நடிப்பில் வரும் அக்டோபர் 31 - தேதி அதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்திற்காக பல பேட்டிகளில் படக்குழுவினர் மற்றும் கவின் கலந்து கொண்டு வருகின்றனர். 


இது தொடர்பாக கவின் கூறுகையில் ஸ்டார் படத்தின் கதையை முதலில் கேட்டபோது எனக்கு பிடித்தது. அதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், இறுதியில் படம் கொஞ்சம் நீண்டு கொண்டே போனது போல் இருந்தது. அதனால் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன்.  சில காட்சிகள் படத்திலிருந்து விலகி இருந்தது அது நன்றாக இருக்கும் காட்சிகளையும் சேர்த்து கெடுக்கும் என்று கூறினேன். இருப்பினும், படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தார்கள். 


பிச்சை காரன் கெட்டப் போட்ட பிறகு டெஸ் பண்ண ஒரு அக்கா கிட்ட போயிட்டு அக்கா 2 நாலா சாப்பிடல ஏதாவது இருந்தா தாங்கனு சொன்னான் அவங்க உள்ள போயிட்டு வந்து 20 ரூவா தந்தாங்க அப்பவே ஓகே பண்ணிட்டேன் நேரா ஷூட்டிங்கு போகலாம்னு. படம் நல்லா வந்து இருக்கு மக்களுக்கு புடிக்கும்னு நம்பிக்கை இருக்கு என்று கூறியுள்ளார்.  

Advertisement