• Feb 21 2025

விஜய்க்கு பணக் கொழுப்பு - சீமானின் விமர்சனத்தால் பரபரப்பு..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தனது அரசியல் கட்சியான த.வெ.க கட்சியை தொடங்கியுள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. விஜயின் அரசியல் நுழைவு ஒரு புதிய யுகத்தைத் தொடங்குமா, அல்லது அவர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரிக்குமா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.


இந்நிலையில், தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜயின் அரசியல் பயணத்தைக்  கடுமையாக விமர்சித்து, "விஜய்க்கு பண கொழுப்பு அதிகம், அதனால்தான் அரசியலில் இறங்கியிருக்கிறார்" என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இது விஜயின் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

விஜய் தனது 'தளபதி மக்கள் இயக்கம்' மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து த.வெ.க  கட்சியை தொடங்கியது அவரது அரசியல் கனவுகளை வளர்த்து வைக்கிறது. ஆனால், அவரது கட்சி தனியாக போட்டியிடுமா? அல்லது வேறொரு கூட்டணியுடன் சேருமா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.


இதனைப் பற்றி சீமான் பேட்டி ஒன்றில் கூறுகையில், "அரசியல் என்பது பணத்தால் வரும் மேடையாக இருக்கக் கூடாது. மக்களை  உண்மையாக நேசிக்கும் தலைவர்களை கொண்ட மேடையாகவே இருக்க வேண்டும் " என தெரிவித்தார். ஆனால், விஜயின் ரசிகர்கள், "விஜய் எந்த ஒரு கட்சியிலும் இணையாமல், தனது சாதனை மூலம் அரசியல் வெற்றியை அடைய முடியும்" என்று வாதிடுகின்றனர்.

அந்தவகையில் விஜய்  அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்குவாரா? என்பது சீமானின் கேள்வியாக உள்ளதனை அறியமுடிகிறது.


Advertisement

Advertisement