• Feb 22 2025

பிரபல நடிகருக்கு தனது சொத்தை எழுதிக்கொடுத்த ரசிகை - ஷாக்கில் ரசிகர்கள்..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜயின் லியோ படத்தில் வில்லனாக தோன்றி விஜயை மிரட்டும் அளவு நடித்திருந்தார் சஞ்சய் தத். இவரது தீவிர ரசிகை ஒருவர்  செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் , மும்பையை சேர்ந்த நிஷா பாட்டிஸ் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை என கூறப்படுகின்றது. 62 வயதினை உடைய பெண் ரசிகையான இவர் நிறைய நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலன் இன்றி காலமானார்.


இவர் இறப்பதற்கு முன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தும் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். அதாவது ,நிஷா பாட்டிஸ் இறப்பதற்கு முன்பு தனது வங்கியில் இருந்த 72 கோடி பணத்தை நடிகர் சஞ்சய் தத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றும் படி எழுதிவைத்துள்ளார்.

இதனை வங்கி நிர்வாகம் பொலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு நடிகர் சஞ்சய் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். அத்துடன் அந்த ரசிகையை நான் ஒரு முறை கூட பார்த்ததில்லை என்று கூறியதுடன் இது எனக்கு மிகவும் வேதனையை தருகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

அந்த சொத்து தனக்கு வேண்டாம் எனக் கூறியதுடன் அதனை அவரது வீட்டு உறவினர்களுக்கு வழங்குமாறும் தெரிவித்தார். இது திரையுலகம் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement