• Aug 11 2025

விஜய்யை காப்பாற்ற விஜயகாந்த் செய்த உதவி..சந்திரசேகர் நெகிழ்ச்சி!

luxshi / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய், தனது ஆரம்ப காலங்களில் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் அந்த நிலையிலிருந்து மீண்டு வர காரணமான முக்கிய நிகழ்வை, அவரது தந்தை, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் விரிவாக பகிர்ந்துள்ளார்.


விஜய் நடித்த முதல் படம் “நாளைய தீர்ப்பு” பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. 


அந்த தோல்வியால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மகனை மீட்டெடுக்க, அன்றைய காலகட்டத்தில் பிரபலமான பல நடிகர்களிடம் விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டுமென கேட்டேன். ஆனால், யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை.

அப்போது என் மனைவி, “விஜயகாந்திடம் கேட்டு பாருங்கள்” என்று பரிந்துரைத்தார். அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும், உங்கள் வீட்டிற்கு வருகிறேன்” என்று கூறி குளிக்கச் சென்றேன்.


குளித்து வந்து பார்த்தபோது, எனது அறையில் விஜயகாந்த் அமர்ந்திருந்தார். “உதவி கேட்க நீங்க என் வீட்டுக்கு வர வேண்டாம், என்ன உதவி வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று அவர் கூறினார். விஷயத்தைச் சொன்னவுடன், எந்த தயக்கமுமின்றி “எப்போ படம் ஆரம்பிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

படத்தில் நடித்ததற்கான சம்பளமாக 1 லட்சம் ரூபாய் கொடுக்க முயன்றபோதும், “இது உதவி என்றால், நான் பணம் வாங்க மாட்டேன்” என்று அவர் மறுத்துவிட்டார்.


இவ்வாறு உருவானது தான் “செந்தூரப்பாண்டி” திரைப்படம். 


இந்த படம் விஜய்யின் ஆரம்பகால கரியரில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. “இன்று விஜய் உயர்ந்த இடத்தில் நிற்பதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த். 

இந்த நன்றியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்” என சந்திரசேகர் வலியுறுத்தினார்.

மேலும், “விஜயகாந்த் போல உயர்ந்த மனம் கொண்ட மனிதரை இனி நாம் பார்க்க முடியாது. அவர் முதலமைச்சராக இருந்திருந்தால், மக்களை நல்வழியில் நடத்தி இருப்பார். தமிழ்நாடு அந்த பொற்காலத்தை இழந்துவிட்டது” என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement