• Sep 28 2025

இந்திய சினிமாவில் புதிய வரலாறு...!மஹா அவதார் நரசிம்மா ரூ.210 கோடி வசூல் சாதனை...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

'கே.ஜி.எப்', 'காந்தாரா' போன்ற ஹிட் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், இப்போது பிரம்மாண்ட அனிமேஷன் படமான ‘மஹா அவதார் நரசிம்மா’வின் மூலம் மேலும் ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.


இப்படத்தை இயக்கியுள்ளவர் இயக்குநர் அஸ்வின் குமார், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இவர்களின் தனித்திறமையுடன் உருவான இந்த படம், பாரம்பரிய இந்திய புராணக் கதையை மையமாகக் கொண்டு அமோகமான கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப காட்சிகளுடன் உருவாகியுள்ளது.


படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்க, இதுவரை உலகம் முழுவதும் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது, ஒரு அனிமேஷன் திரைப்படமாகும் என்பதையும் கருத்தில் எடுத்தால், இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய சாதனை எனலாம்.


படம் கிடைத்த விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் உற்சாகம், இந்திய கிராபிக்ஸ் தொழில்நுட்பம் உலக தரத்தில் வளர்ந்து வருவதை காட்டுகிறது. அனிமேஷன் பாணியில் ஆன்மீக புனித கதைகளை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்துள்ள இப்படம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement