• Sep 20 2024

கோட் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்.. இணையத்தில் லீக்கான செம சீன்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கால்பாத்தி எஸ் அகோரம்  தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தான் கோட் திரைப்படம். இந்த திரைப்படம் சொன்ன மாதிரியே எந்த ஒரு தடையும் இல்லாமல் செப்டம்பர் 5ஆம் திகதியான இன்றைய தினம் வெளியானது.

விஜய் படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்தும் பல ரசிகர்கள் கேரளாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் தளபதி விஜயின் கோட் படத்தை பார்ப்பதற்கு முன்னாடியே ஒட்டுமொத்த படமும் ஆன்லைன்ல வந்து விடும் என்ற காரணத்தினால் அதனை ஸ்பாய்லர் பண்ண வேண்டாம் என்று தமிழ்நாட்டு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது சோசியல் மீடியாவில் #GOAT  டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், முதல் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்த் கோட் சூட்டில் வரும் காட்சியை இணையத்தில் லீக் செய்து விட்டார்கள்.


கோட் படத்தின் ஆரம்பத்திலேயே கேப்டன் விஜயகாந்த் என்ட்ரி செம ட்விஸ்ட்டாக இருந்து வரும் நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளதோடு இணையத்திலும் லீக் செய்ததால் தற்போது தீயாக பரவி வருகின்றது.

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை வெங்கட் பிரபு தனது கிரியேட்டிவிட்டி மூலம் கொண்டு வந்துள்ளார். அதற்காக அர்ச்சனா கால்பாத்தி பல கோடிகளை செலவு செய்து உருவாக்கியுள்ள நிலையில், முதல் காட்சியே விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement