• Sep 09 2026

கோட் படத்தில் தளபதி தரிசனம் தெறிக்குதா? வெளியான டுவிட்டர் விமர்சனம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள படம் தான் கோட் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, அர்ச்சனா கால்பாத்தி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இன்றைய தினம் உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் கோட் படம்  வெளியாகி  உள்ளது. படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள்  இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கோட் படம் எப்படி உள்ளது என டுவிட்டர் விமர்சனங்களை பார்ப்போம்.


அதன்படி கோட் திரைப்படம் விறுவிறுப்பான ஒரு ஆக்சன் கதையாகவே ஆரம்பமாகியுள்ளது. ஒட்டுமொத்த படத்தையும் நடிகர் விஜய் ஒரே ஆளாக தூக்கி நிறுத்தி உள்ளார். இவருடைய அறிமுகம் மற்றும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கும் வகையில் இடைவெளி காட்சி அமைந்துள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெங்கட் பிரபு சொன்னது போலவே ஆக்சன், காமெடி, பேமிலி சென்டிமென்ட் என அனைத்து கோணத்திலும் விஜயை காட்டியுள்ளார் என இன்னொருவர் கூறியுள்ளார். 

அதேபோல சமீப காலத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு கோட் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது டுவிட்டர் விமர்சனமே சிறப்பாக வந்துள்ள நிலையில், மொத்த படமும் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம் இதோ ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனங்கள்.






Advertisement

Advertisement