• Jan 19 2025

14 ஆண்டுகளுக்கு பின் கேரளாவை தரிசிக்கும் விஜய்.. அங்கும் ரசிகர்களுடன் செல்பியா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயருடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து தனது கட்சியை விரிவாக்கவும், மக்களுக்கான சேவையை திறம்பட செய்வதற்காகவும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு விறுவிறுப்பாக தனது அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மறுபக்கம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில், இப்படத்திற்கான படப்பிடிப்பானது தமிழ் நாட்டில் நடந்து வந்த நிலையில், தற்போது அடுத்த படப்பிடிப்பானது கேரளாவில் உள்ள திருவந்தபுரத்தில் அடுத்த வாரம் ஆரம்பிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற காவலன்  திரைபடத்தின் படப்பிடிப்பின் போது கேரளா சென்ற விஜய்க்கு கேரளா ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து இருந்தனர்.

இவ்வாறான நிலையில், தற்போது 14 வருடங்கள் கழித்து தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா செல்கிறார் விஜய். இதையறிந்த கேரளா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement