• Jan 19 2025

18 ஓடிடி தளங்கள், 57 இணைய கணக்குகளுக்கு மூடுவிழா நடத்திய மத்திய அரசு! முழுவிபரம் இதோ..

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

18 ஓடிடி தளங்கள், 57 சமூக வலைத்தள கணக்குகள் என மோசமான காட்சிகளை உள்ளடக்கிய சமூக வலைத்தள கணக்குகளை, மத்திய அரசு அதிரடியாக  முடக்கியுள்ளது.

உலக நாடுகளில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் முக்கியமான நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் காணப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அபரிதமான வகையில் மனித ஆற்றலை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

ஆனால் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய நபர்கள் தொடர்ந்தும் அவதூறு மற்றும் மோசமான செயல்களை கையில் எடுத்து சமூகத்தை சீரழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதாவது, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்கு பின்னும்  மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பெண்கள் பாதுகாப்பு உட்பட சட்ட விதிகளின் கீழ் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 கணக்குகள், ட்விட்டர் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூப் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஓடிடி தளங்களாக  டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா , அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ் , எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஐபி பேஷரம்ஸ் , ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட் , நியூஃப்லிக்ஸ் , மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஷாட்ஸ் விஐபி, ஃபியூகி, சிகூஃப்லிக்ஸ் , பிரைம் ப்ளே ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement