• Dec 19 2025

இளம் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி.. வெளியான அதகள அப்டேட்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்து உள்ளார் விஜய் சேதுபதி. பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை அசாத்தியமாக வெளிப்படுத்தும் நடிகராக விளங்கும் விஜய் சேதுபதி, தனது நடிப்புத் திறனால் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகம் முழுவதும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர்.


அவரின் அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்தினம் இயக்குகிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியவுடன், அது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘நாயகன்’, ‘ராவணன்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்கள் மூலம் கதையை கலைநயத்துடன் சொல்லும் இயக்குநராக பெயர் பெற்றுள்ள மணிரத்தினத்துடன் விஜய் சேதுபதி இணைவது, தமிழ் சினிமாவில் பெரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது. இயல்பான நடிப்பு, கவர்ச்சிகரமான முகபாவனைகள், அசைக்க முடியாத திறமை என்பன மூலம்  ரசிகர்களின் இதயத்தில் தனி இடம்பிடித்திருக்கும் சாய் பல்லவி, மணிரத்தினம் படத்தில் நடிப்பது அவருடைய கரியரின் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன் இக்கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஜனவரி மாதம் வெளியாகும் எனவும், படப்பிடிப்பினை ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement