• Jan 22 2026

அவதார்-4 உருவாக வாய்ப்புள்ளதா.? இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட அதிரடிக் கருத்து.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக திகழும் ‘அவதார்’ தொடரின் மூன்றாம் பாகம், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே செம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார் 3’ இம்மாதம் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த அவதார் தொடரின் ஒவ்வொரு அப்டேட்டும் உலக செய்தியாக மாறிவரும் நிலையில், மூன்றாம் பாகத்தின் ரிலீஸை முன்னிட்டு, படக்குழு பாரிஸில் பிரம்மாண்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்தனர்.


நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பு தருணமாக இருந்தது, ஜேம்ஸ் கேமரூன் வெளிப்படுத்திய ஒரு அதிர்ச்சி தகவல். பொதுவாக அவதார் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பற்றி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். 

இந்த நிலையில், 4வது பாகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது கேமரூன் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, “அவதார் 4-ஐ இயக்கும் எண்ணம் இல்லை.” எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement