தமிழ் இசை உலகில் தனித்துவமான ஸ்டைல் , மனதை கொள்ளை கொள்ளும் மெலோடி என்பன மூலம் யுவன் ஷங்கர் ராஜா அடையாளமாக நீண்ட காலமாக இருந்து வருகின்றார். தனது 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இசைப் பயணத்தில் எண்ணற்ற ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு பரிசளித்த யுவன், தற்போது சிறியதொரு க்யூட் வீடியோ மூலம் இணையத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் என்பதைத் தாண்டியும், புதிய முயற்சிகளை செய்வதில் தயங்காத கலைஞர் என்ற வகையில் ரசிகர்கள் யுவனை கொண்டாடுகின்றனர். அவரின் ஒவ்வொரு இசை அப்டேட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இந்நிலையில், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையின் இனிய தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக ஊடகங்களைக் கவர்ந்துள்ளது.
சமீபத்தில், யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், தனது வீட்டில் வளர்த்து வரும் அழகான பூனையுடன் யுவன் நேரத்தை கழிப்பதைப் பார்க்க முடிகிறது.

அந்தப் பூனையுடன் யுவன் பாடல் பாடிக்கொண்டே விளையாடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, யுவன் அதன்போது, "லூசுப் பூனை... லூசுப் பூனை.... லூசுப் பையன் உன் மேல தான்.." என்ற பாடலைப் பாடி விளையாடுகின்றார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!