• Jan 18 2025

’உன் தலையை எடுத்த மாதிரி அவன் தலையையும் எடுப்பேன்டா.. ‘மகாராஜா’ டிரைலர்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ‘மகாராஜா’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அவருடைய புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் மகளை கண்டுபிடிக்க தனிப்படை அமையுங்கள்,  உங்களால் முடியவில்லை என்றால் சிபிஐ இடம் இந்த வழக்கை கொடுங்கள் என்றும் காவல்துறை அதிகாரி நட்டியிடம் விஜய் சேதுபதி சொன்னபோது விஜய் சேதுபதி அவரை ஓங்கி அடிக்கிறார்

இதையடுத்து தனது மகளை தானே தேட களமிறங்கும் விஜய் சேதுபதி அதில் வெற்றி பெற்றாரா என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், வினோத் சாகர், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அஜனிஷ் லோக்நாத் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement