• Oct 30 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் விஜய் மக்கள் நிர்வாகிகள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

 தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால்,டிசம்பர் 4ந் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்தது.

இதனால் பெரும்பாலான ஆறுகள் நிரம்பிவிட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்களையும் இந்த மிக்ஜாம் புயல் விட்டு வைக்கவில்லை.சென்னையில் மட்டும், 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்


பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால், பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல், வீட்டிற்குள்ளேயே பலர் முடங்கிக் கிடக்கின்றனர். இவர்களுக்கு தேவையான உதவியினை அரசாங்கம் செய்தும் வருகின்றது.

 அவர்களுக்கு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள் படகில் வீடு தேடி சென்று உதவி செய்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


பெரும்பாலான பகுதிகளில் இன்னும்மழை நீர் வடியாததால், பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.


 அவர்களுக்கு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement