• Apr 02 2025

இறங்கியாச்சு. இனி பின்வாங்க முடியாது.. அரசியல் பயம் காட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியை அவர் மக்கள் மத்தியில் எப்படி வேகமாக கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் நிலையில் அவருக்கு சில அரசியல் பிரபலங்கள் பயம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்திய சரத்குமார் சமீபத்தில் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டதாகவும், திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று முழங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசனும் திராவிட கட்சியுடன் இணைந்து விட்டதாகவும் எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்றும் எனவே நீங்களும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுங்கள் என்று விஜய்யிடம் பிரபல அரசியல்வாதி ஒருவர் கூறியதாக தெரிகிறது.

மேலும்உங்களால் அரசியலில் தாக்கு பிடிக்க முடியாது, நீங்கள் சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கிறீர்கள், அதையே நீங்கள் தொடர்ந்தால் மிகப்பெரிய எதிர்காலம் உங்களுக்கு சினிமாவில் இருக்குஎன்று அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களும் கூறியதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி புஸ்ஸி ஆனந்த் போன்ற நபர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எந்த பெரிய செயலையும் செய்ய முடியாது என்றும் அவர் எப்போது வேண்டுமானாலும் உங்களை காலை வாரி விடுவார் என்று விஜய்க்கு ஆலோசனை கூறியதாக தெரிகிறது. ஆனால் விஜய் எதையும் காதில் வாங்க கொள்ள வாங்கிக் கொள்ளவில்லை என்றும் அரசியல் இறங்க வேண்டும் என்ற முடிவு செய்து இறங்கியாச்சு, இனி பின்வாங்க முடியாது, நாம அரசியலில் வளர அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஐடியாவை மட்டும் சொல்லுங்கள் என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.

எத்தகைய அரசியலை முன்னிறுத்துவது? கட்சியில் யார் யாருக்கு பொறுப்பு கொடுப்பது? அரசியல் களத்தில் கட்சியை பெரிதாக எடுத்துக் கொண்டு எப்படி கரை சேர்ப்பது போன்ற கேள்விகளை அவர் அரசியல் நுட்பம் தெரிந்த சில சீனியர்களிடம் கேட்டு வருவதாகவும் அரசியல் முடிவில் இருந்து எந்த காரணத்தை முன்னிட்டு பின்வாங்க போவதில்லை என்று விஜய் உறுதியாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement