நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்
இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை
தொடங்கினார் என்பதும் அவரது அரசியல் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரான மன்சூர் அலிகானை அந்த கட்சியின் பொதுச்செயலாளர்
கண்ணதாசன் என்பவர் திடீரென நீக்கி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் நடிகர்கள் அரசியலில்
ஈடுபடுவதும், அரசியல் கட்சியில் சேர்வதும், புதிய அரசியல் கட்சியை தொடங்கி வருவதுமாக உள்ளனர். அந்த வகையில் நடிகர்
மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை
தொடங்கிய நிலையில் அதன் செயற்குழு கூட்டம்
நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் என்பவருக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென
சற்று முன் வந்த அறிவிப்பின்படி
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில்
தீர்மானம் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்சி தலைவரின் முழு அதிகாரமும் பொதுச்செயலாளர்
கண்ணதாசனுக்கு தான் வழங்கப்படுவதாகவும் அவருடைய தலைமையில்
தான் கட்சி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
எந்த ஒரு அரசியல் கட்சியிலும்
தலைவர் தான் கட்சியில் உள்ள
நிர்வாகிகளை, உறுப்பினர்களை நீக்குவார், ஆனால் இந்த கட்சியில் தலைவரையே
பொதுச்செயலாளர் நீக்கி அரசியல் என்ற பெயரில் காமெடி
செய்து வருகின்றனர் என நெட்டிசன்கள் விளாசி
வருகின்றனர்.
Listen News!