• Sep 29 2025

கரூரில் ஏற்பட்ட பரிதாப நிலை... 34மணி நேரத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய விஜய்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த ஒரு துயர சம்பவம் நடந்தது. த.வெ.க நடத்திய பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளதோடு, நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வு பரபரப்பாக நடைபெற்று வந்தபோதும், ஒருசமயம் எதிர்பாராதவிதமாக கூட்டம் கட்டுப்பாட்டை இழந்தது. பலர் ஒரே நேரத்தில் மேடைக்கு அருகில் செல்ல முயற்சித்ததால், நெரிசல் உருவானது. இந்த நெரிசலில் பலர் தவறி விழுந்தனர். பாரிய கூட்டத்தில் சிக்கிக் கொண்ட பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


இதையடுத்து உள்ளூர் காவல்துறையும், மருத்துவ அணிகளும் விரைந்து செயல்பட்டன. பலர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சைக்கு அளித்தும் 41 பேர் உயிரிழந்தனர் என்பது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற பின், மக்கள் நலனுக்காக பல சமூக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்தனர். அத்துடன் நடிகர் விஜய், நிகழ்வு நடந்த அதே இரவு கரூர் மக்களை நேரில் சந்திக்க விரும்பினார். எனினும் காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். 

இதனால் சனிக்கிழமை இரவு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு விஜய் வந்தடைந்தார். அதன்பின், அவர் எந்தவொரு பொதுமக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளாமல், ஊடகங்களிடமும் தொடர்பு கொள்ளாமல் வீட்டிற்குள் இருந்தார். 

இந்நிலையில், 34 மணி நேரம் கழித்து, இன்று காலை நடிகர் விஜய் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,விஜய் தற்பொழுது நீலாங்கரை வீட்டிலிருந்து தனது பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement