தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ’தளபதி 69’ படத்துடன் திரையுலக வாழ்வை முடித்துக் கொள்வதாகவும் முழுக்க முழுக்க அரசியலில் முழு நேரமாக களமிறங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
எனவே ’தளபதி 69’ திரைப்படம் தான் அவரது கடைசி படம் என்றும் 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வர், இல்லையேல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நோக்கத்துடன் அவர் அரசியலில் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தை அடுத்து இன்னும் இரண்டு படங்கள் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் எம்ஜிஆர் பாணியில் சினிமாவில் அரசியலை கலந்து கொடுக்கலாம் என்றும் 300 கோடி ரூபாய் வரை சம்பளம் தருகிறோம் என்றும் சில தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை கூறி வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் ’தளபதி 69’ திரைப்படத்தை ஆறு மாதத்தில் முடித்து விட்டால் அதன் பிறகு ஒன்றை வருடங்கள் ஏன் வீணாக்க வேண்டும்? அதற்குள் இரண்டு படங்கள் நடித்தால் 600 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியதாகவும் இதனை அடுத்து விஜய் இன்னும் இரண்டு படங்கள் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போகப்போக பார்ப்போம்.
Listen News!