• Jun 16 2024

ஏற்கனவே திருமணமான எம்.எல்.ஏவுடன் திருமணமா? ரேகா நாயர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாகவே நடிகை ரேகா நாயர் பரபரப்பாக பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் எம்எல்ஏ ஒருவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் அந்த எம்எல்ஏ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ரேகா நாயர். அந்த படத்தின் கதைக்கு அந்த கேரக்டர் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்ற நிலையில் எந்த விதமான மறுப்பு தெரிவிக்காமல் போல்டாக ரேகா நாயர் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பயில்வான் ரங்கநாதன் அந்த காட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரை கடற்கரையில் வைத்து நடிகை ரேகா நாயர் வெளுத்து வாங்கினார் என்பதும் இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ரேகா நாயர் திருமணம் ஆன எம்எல்ஏ ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏக்கு நெருக்கமானவர்கள் கூட ரேகா நாயருடன் அதிக நேரத்தை எம்.எல்.ஏ செலவு செய்கிறார் என்று அதிருப்தியை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ரேகா நாயர் விளக்கம் அளித்த போது ’எம்எல்ஏ அப்பாவும் நானும் ஒன்றாகத்தான் மாரத்தான் ஓடுவோம், ஒரே ஏரியாவில் நாங்கள் இருவரும் குடியிருப்பதால் காலையில் வாக்கிங் போகும்போது நண்பர் ஆனார். அவர் மூலமாக அவருடைய குடும்பத்தினர் உள்ள அனைவரும் எனக்கு நண்பர் ஆனார்கள். எனக்கும் அந்த எம்எல்ஏக்கும் திருமணம் ஆகி விட்டதா என்ற கேள்விக்கு உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் நீங்கள் அந்த எம்எல்ஏ கிட்ட தான் கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement