• Jan 19 2025

அஜித் ஜோடியாக நயன்தாராவா? விக்கி எப்படி ஒப்புக்கொண்டார்? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது திரை உலகினர் மத்தியில் மட்டும் இன்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருந்த நிலையில் அந்த படம் திடீர் என டிராப்பானது. அப்போது அஜித்திடம் நயன்தாராவே பர்சனலாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த படம் டிராப் ஆனால் தனது கணவருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கெஞ்சியதாகவும் ஆனால் அஜித் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து தான் அஜித் மீது நயன்தாராவுக்கு மிகவும் கோபம் என்றும் அஜித் படத்தில் இனிமேல் நடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அவரது காட்சிகள் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடந்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருவது தான் திரை உலகினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் நயன்தாரா ஒப்புக்கொண்டாலும் விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். உண்மையிலேயே அஜித் படத்தில் நயன்தாரா நடிக்கிறாரா? அல்லது முழுக்க முழுக்க வதந்தியா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

Advertisement

Advertisement