பிரபல இயக்குனராக காணப்படும் விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் என்ற அடையாளத்தை விட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவர் என்ற அடையாளம் தான் அதிகமாக பேசப்படுகிறது.
சமீபத்தில் நயன்தாரா கொடுத்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் உள்ள மூவரை குரங்குகள் என விமர்சித்து இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
d_i_a
இதற்கு பதிலளித்த வலைப்பேச்சு டீமில் உள்ளவர்கள், நயன்தாரா பற்றிய விஷயங்கள் எங்களுக்கு தெரியும், அதனை நாங்கள் வெளியில் சொல்லி விடுவோம் என்ற அச்சத்தில் தான் நயன்தாரா இப்படி சொன்னதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், கவர்ச்சி நடிகையான சோனா வீட்டில் பல மாதம் தங்கி இருந்து வேலை பார்த்தவர் தான் விக்னேஷ் சிவன் என்று புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார் பிஸ்மி. தற்போது இவர் தெரிவித்த கருத்து வைரலாகி வருகின்றது.
அதாவது வலைப்பேச்சு யூடியூப் சேனலில் உள்ளவர்களை நயன்தாரா விமர்சித்த நிலையில், நயன்தாரா பற்றியும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் பற்றியும் பல தகவல்களை இந்த சேனலில் உள்ளவர்கள் வெளியிட்டு வருகின்றார்கள்.
அதன்படி குறித்த சேனலில் உள்ள ஒருவரான பிஸ்மி, நடிகை சோனா வீட்டில் பல மாதம் தங்கி இருந்து வேலை பார்த்தவர் தான் விக்னேஷ் சிவன் என்று புதிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
ஏற்கனவே அரச ஹோட்டலை விலைக்கு கேட்டதாக விக்னேஷ் சிவன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதற்கு இன்றைய தினம் விளக்கம் கொடுத்திருந்தார் விக்னேஷ் சிவன். தற்போது பிஸ்மி கிளப்பியுள்ள புதிய சர்ச்சைக்கும் விளக்கம் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!