சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஸ்ரீ தேவா. இவர் இந்த சீரியலில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார்.
இந்த சீரியலில் மிகவும் படித்தவர் என்ற பெருமையும், நான்கு பட்டங்களை பெற்றவர் என்ற பெருமையும் மனோஜ்க்கு காணப்படுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் அவர் நடந்து கொள்வதில்லை. பேராசையில் நஷ்டப்படும் ஒரு கேரக்டராக காணப்படுகின்றார்.
அத்துடன் இவரது மனைவியாக உள்ள ரோகிணியும் மனோஜை ஏமாற்றும் வகையில் அவருடன் வாழ்ந்து வருகின்றார். எனினும் தனது மனைவியை முழுமையாக நம்பும் ஒரு கணவராக மனோஜின் கேரக்டர் காணப்படுகிறது.
d_i_a
தற்போது இந்த சீரியலில் மனோஜூம் ரோகிணியும் இணைந்து மூன்று கோடிக்கு பேலஸ் ஒன்றை வாங்குவதற்காக அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு கொடுக்கின்றார்கள். அதே நேரத்தில் மனோஜின் பழைய காதலியான ஜீவாவும் மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கின்றார்.
எனவே இனிவரும் நாட்களில் ரோகினியின் கபட நாடகம் வீட்டாருக்கு தெரிய வருமா? இதுவரையில் மனோஜ் பண விஷயத்தில் செய்த தில்லாலங்கடி வேலைகள் வெட்ட வெளிச்சம் ஆகுமா? முத்துவிடம் ஜீவா உண்மையை சொல்வாரா? என்ற ஆவலில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டா பக்கத்தில் வில்லேஜ் ஒன்றுக்கு வந்தேன்.. அங்கு கலர் கலரா கோழி குஞ்சு... மொட்டை கோழி குஞ்சு இருக்குது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால் அதில் உள்ள சிறுவர்களை பார்த்து தான் மனோஜ் இவ்வாறு கோழிக் குஞ்சுகள் என்று பேசியுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!