பிரபல நடிகராக காணப்படும் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருவது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எபிசோட்டில், KAG டைல்ஸ் ப்ரோமோஷனுக்காக பிக்பாஸ் கொடுத்த கடிதத்தை தீபக் படித்தார். அதில் அவர் ஆத்தங்குடியில் கையால் செய்யும் டைல்ஸ்களை விட KAG இயந்திரங்களில் செய்யப்படும் டைல்ஸ்கள் சிறப்பாக செய்யப்படுவதாக ஒரு வார்த்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறிய தவறான செய்தியை ஒளிபரப்பிய விஜய் டிவி மீதும், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி மீதும் காரைக்குடி உதவி கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்களும் தொழிலாளர்களும் புகார் கொடுத்துள்ளார்கள்.
ஆத்தங்குடி டைல்ஸ் என்பது சுற்று சூழலுக்கு உகந்த கையால் செய்யப்பட்ட தரை ஓடுகள் என அழைக்கப்படுகிறது. இது இயந்திரங்களின் உதவி இன்றி முற்றிலும் கைகளால் செய்யப்படும். இந்த டைல்ஸ் செட்டிநாட்டு அரண்மனைகளுக்கு அழகு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
Listen News!