• Jul 04 2025

பாரதி கண்ணம்மாவின் விடாமுயற்சி..? பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் பாஸ்டர் சற்று முன் வெளியானது. எனினும் இந்த போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு காரணம் அஜித் நீண்ட சாலையில் நடந்து வருவது போலவும், அவருடைய கெட்டப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் தான். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அது மட்டும் இன்றி விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் பெட்டியை தூக்கிக்கொண்டு ரோடு ரோடாக அலையும் காட்சியோடு வைத்து பங்கமாக கலாய்த்து தள்ளி உள்ளனர்.


அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலின் ஒரு கட்டத்தில், ரோஷினி வீட்டார்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தனது கர்ப்பத்தோடு கையில் பெட்டியையும் எடுத்துக்கொண்டு ரோடு ரோடு திரிவார்.

இந்த சீரியலை பார்த்து பொறுமை இழந்த நெட்டிசன்கள் அதனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களை வைத்து டிரெண்டாக்கி உள்ளதோடு, அவர் நிலாவில் நடப்பது போலவும், பாலைவனத்தில் நடப்பது போலவும், ஏர்போர்ட்டில் நடப்பது போலவும் வைத்து ட்ரோல் பண்ணி இருந்தார்கள்.

அந்த வகையில் தற்போது விடாமுயற்சி படத்தின் போஸ்டரையும் பாரதி கண்ணம்மா சீரியலோடு வைத்து ட்ரோல் பண்ணி வருகின்றார்கள். தற்போது இந்த போஸ்டர் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement