• Jan 19 2025

சக்காளத்திக்கு பாக்கியா செய்த காரியம்... இதெல்லாம் ரொம்ப ஓவர்ல.. வீடியோ இதோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

பாக்கியலட்சுமி சீரியலில் கர்ப்பமாக இருந்த ராதிகாவின் கர்ப்பம் எதிர்பாராத விதமாக கலைந்து விடுகிறது. இதற்கு காரணம் ஈஸ்வரி என்று அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்.

இதற்கு இடையில் கோபி நடந்தவற்றை எண்ணி மீண்டும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி விட்டார். கோபி மேல் இருக்கும் கோபத்தினால் அவரை வெறுத்து தள்ளி வருகின்றார் ராதிகா.


மறுபக்கம், ஈஸ்வரியின் மனநிலையை சரி படுத்துவதற்காக அவரை கும்பகோணம் அழைத்து செல்கிறார் பாக்கியா. அங்கு அவரின் பழைய நண்பியான சாவித்திரியை தேடி கண்டுபிடித்து ஈஸ்வரிக்கு கொடுக்கின்றார். இதனால் ஈஸ்வரி மீண்டும் பழைய நிலமைக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முட்டி மோதும் கோபியின் பொண்டாட்டிகள் இருவரும் தற்போது ரில்ஸ்  ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள்.

அதில் ராதிகாவுக்கு பாக்கியா சாப்பாடு ஊட்டி விடுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் சக்காளத்திக்கு சாப்பாடு ஊட்டி விடுறீங்களா? என கிண்டல் அடித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement