• Jan 19 2025

100 ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும்: வேதிகாவுக்கு இயக்குனர் வைத்த டாஸ்க்..! அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை வேதிகா தற்போது ஒரு வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் அந்த வெப் தொடரின் கேரக்டர் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு அவர்களை கொலை செய்யும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக வேதிகா நடித்து வந்தாலும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பது துரதிஷ்டமே. இதனை அடுத்து ஓடிடியில் வெப் தொடரில் நடித்து வரும் வேதிகா தற்போது ’யக்‌ஷினி’ என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்..

குபேரனிடம் சாபம் வாங்கும் யக்‌ஷினி, அந்த சாபத்திலிருந்து விமோசனம் அடைய வேண்டுமென்றால் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு பின்னர் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற சாப விமோசனம் கொடுக்கப்படுகிறது.

இதனை அடுத்து 99 பேர்களுடன் அவர் உடலுறவு கொண்டு கொலை செய்த நிலையில் நூறாவது ஆளாக ஹீரோவை சந்திக்கும் யக்‌ஷினி, அவர் மீது உண்மையிலேயே காதல் கொள்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் இந்த  தொடரின் கதை.

இந்த தொடருக்காக ’அவதார்’ படத்தில் வரும் ஹீரோ மாதிரி நீலக்கலரில் மேக்கப் போடும் வீடியோவை நடிகை வேதிகா பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை போடுவதற்கு மூன்று மணி நேரம், கலைப்பதற்கு இரண்டு மணி நேரமும் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement