• Jul 05 2026

விஜயுடன் ஒரு மணி நேர பேச்சுவார்த்தை.! இறுதியில் த்ரிஷா காட்டிய தம்ப்ஸ் அப்.. வைரல் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முதல் தேர்தலிலேயே 107 தொகுதிகளில் வெற்றி பெற்று த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க. கட்சி, முதல் முயற்சியிலேயே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத சாதனையாக பதிவாகியுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய், தன்னை ஒரு தீவிர அரசியல்வாதியாக நிரூபித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணி 74 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இருப்பினும் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக த.வெ.க.வே முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வெற்றி செய்தி வெளியானதும் நடிகை திரிஷா சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து விஜய்யின் வீட்டிலிருந்து வெளியே வந்த திரிஷா பத்திரிகையாளர்களை நோக்கி வெற்றியின் அடையாளமான தம்ப்ஸ் அப் சைகையை காட்டினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை த்ரிஷா காட்டிய தம்ப்ஸ் அப் சைகை ஏற்கனவே கில்லி படத்தில் விஜயுடன் நடித்த போது அவர் ஜெயிக்க வேண்டும்  கோணத்தில் காட்டப்பட்ட தம்ப்ஸ் அப்பாக தற்போது சமூக வலைத்தளங்களில் ரீ கிரியேஷனுடன் உலா வருகிறது.

தற்போது விஜயை திரையில் ரசித்தவர்கள் இன்று தலைவராக தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  


Advertisement

Advertisement