நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான “கர” திரைப்படம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்கு முன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம், வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளின்படி, முதல் இரண்டு நாட்களில் தலா சுமார் 6 கோடி ரூபாய் வசூல் செய்த இப்படம், பின்னர் தினசரி வசூலில் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தது. குறிப்பாக, ஐந்தாவது நாளில் வசூல் கணிசமாக குறைந்து, வெறும் 1.80 கோடி ரூபாயை மட்டுமே பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மொத்த வசூல் ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாயை எட்டவில்லை என கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஆரம்ப எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஓடாத இந்த படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சற்றே பின்னடைவை சந்தித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
Listen News!