• May 05 2026

என்னை தவெகவில் சேர்த்துக்கோங்க.. விஜய்யிடம் கோரிக்கை விடுத்த நடிகை.!

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் விஜய் தலைமையிலான கட்சி ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தால், விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பு உறுதியானதாக பார்க்கப்படுகிறது. இதனால் கட்சியினரிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது.


இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் அவர், விஜய்க்கும் தவெகவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று கூறிய அவர், மக்கள் அளித்த நம்பிக்கையை மதித்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தன்னையும் தவெகவில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இருந்திருந்தால் நேரில் சந்தித்து இதையே தெரிவித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். தற்போது தனது அக்காவின் உடல்நிலை காரணமாக வெளியூரில் இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

அவரின் இந்த உணர்ச்சிபூர்வமான கோரிக்கை, ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்ததோடு அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. பொதுசேவையில் ஈடுபட வேண்டும் என்ற அவரது விருப்பம், புதிய அரசியல் மாற்றங்களுடன் இணைந்து பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement