• May 05 2026

விஜய் கையால அவார்டு வாங்குறது தான் என் லட்சியம்.. மனம் திறந்து கதைத்த பிரபல நடிகர்.!

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் விஜய் தலைமையிலான கட்சி ஆட்சியை நோக்கி முன்னேறி வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், திரையுலகிலும் இந்த வெற்றி பெரிதும் கொண்டாடப்படுகிறது.


இந்த சூழலில், நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா தனது உணர்ச்சிபூர்வமான வாழ்த்து பதிவால் கவனம் ஈர்த்துள்ளார். அவர் தனது பதிவில் “வாரிசு” படப்பிடிப்பு காலத்தில் விஜயிடம் பகிர்ந்த நினைவுகளை குறிப்பிட்டுள்ளார். விரைவில் அவரது கைகளால் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற வேண்டும் என்ற தனது ஆசை, இன்று பாதியாக நிறைவேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி அந்த விருதை உண்மையிலேயே விஜயின் கைகளில் பெற வேண்டும் என்ற இலக்குடன் கடுமையாக உழைப்பேன் என்றும் கூறியுள்ளார். “நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் நண்பா” என்ற அவரது வார்த்தைகள், அவர்களின் நட்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


Advertisement

Advertisement